அழகிய கடன் அறக்கட்டளை - ஓர் அறிமுகம்
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ் சுப்ஹானஹுவதாஆலா மனிதனை இவ்வுலகத்திற்கு தனது பிரதிநிதியாக அனுப்பியதன் நோக்கமே, மனிதன் தன்னைச்சார்ந்தவர்களுக்கு பணியாற்றிட வேண்டும் என்பதற்காகத்தான். சமூகப்பநிகளையும், அறப்பணிகளையும் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய உத்தம நபி(ஸல்) அவர்களுடைய உம்மத்தாராகிய நாம் சமூக சேவையில் அசட்டயாகவும் கவனம் இல்லாமலும் இருப்பது மிகப்பெரும் துரதிர்ஷ்டம் ஆகும். எனவே, அதை களைந்து சமுதாய மக்களை சமூக சேவையாற்ற தூண்டுவதற்காக துவங்கப்பட்டதேஅழகிய கடன் அறக்கட்டளை.
நமது அறக்கட்டளையின் மூலம் ஆற்றிவரும் ஒருசில சமூகப்பணிகளைத் தங்களுக்கு இந்த மடக்கோலை மூலம் சமர்பிக்கின்றோம். இதன் மூலம் எங்களுடைய இக்லாசான பணிகளை விளம்பரப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மாறாக நீங்களும் எங்களுடன் கை கோர்த்து எங்களது சமூகப்பணிகளில் பங்கெடுக்கவும் இதனால் நாம் அனைவரும் மறுமையில் வெற்றியாளர்களாக ஆவதே எண்களின் நோக்கமாகும்.
வட்டியில்லா கடன் திட்டம்
இன்றைய உலகில் பொருளாதாரம் என்றாலே அது வட்டியுடன் இணைந்தது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைச் சீரழித்து மனித வாழ்கையின் அமைதிக்கு ஊரு விளைவிக்கும் இந்த வட்டி, அல்லாஹ்வாலும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களாலும் ஹராமாக்கப்பட்ட சபிக்கப்பட்ட ஒன்றாகும்.
இத்தகைய கொடிய வட்டியைப்பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வதோடு மட்டும் நின்றுகொள்ளாமல், அதிலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு செயல் ரீதியான திட்டம் தேவை என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்டு 1996 ஆம் ஆனது சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டதுதான் அழகிய கடன் அறக்கட்டளை திட்டம். இன்று தமிழகத்தில் நூற்றுக்குமேற்பட்ட கிளைகளாக பரவி இத்திட்டம் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் வெற்றியோடு நடைபெற்று வருகிறது. இது இன்னும் விரிவடைந்து ஒவ்வொரு முஹல்லா பள்ளிவாசலையும் மையமாக வைத்து அழகிய கடன் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தை நோக்கி பாடுபடும் அனைவருடனும் கை கோர்த்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக IIBF (Interest-free Islamic Banking Federation) என்ற அமைப்பை ஆரம்பித்து சென்னையிலும் திண்டுகல்லிலும் விழிப்புணர்வு கண்காட்சிகளும், மாநாடுகளும் நடத்தப்பட்டன. வெற்றிகரமான இந்த மாநாடுகளிலும் நமது அழகிய கடன் அறக்கட்டளையின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது அழகிய கடன் திட்டத்தின் கீழ் நகை அடைமானத்தின் பேரில் ரூ. 25,000/- வரை வட்டியில்லா கடனாக அதிகபட்சம் 3 மாதங்கள் தவணையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இதுவரை சுமார் 2000 பேர் பயனடைந்து உள்ளனர். மேலும், தனி நபர் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கடனுதவி செய்ய விரும்பினால், அவர்கள் அறக்கட்டளையை அணுகும்போது, அவர்களது கடன் தொகைக்கான பாதுகாப்பை அறக்கட்டளை உறுதி செய்யும்.
தாஃவா களப்பணி & பயிற்சி மையம்
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்வது ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் கடமையாகும். அந்த அடிப்படையில் தாஃவா என்னும் அழைப்புப்பணியிலும் நமது அழகிய கடன் அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று அனைத்து நோயாளிகளுக்கும் பிஸ்கட், பழங்கள் போன்ற உணவுகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறி, குர்ஆன் ஆயத்துகளை ஓதி ஊதி அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. இதன் மூலம் இது வரை சுமார் 5000 பேருக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தபட்டுள்ளடு.
முதன் முதலில் அழகிய கடன் அறக்கட்டளை மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புனிதப்பணி விரிவடைந்து பல்வேறு அமைப்புகளால், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!!
மேலும் பெருநாள் சந்திப்புகள் "ஒன்றே குளம் ஒருவனே தேவன்" அறிமுக கூட்டம் என்றும் பெயர்களில் அரங்கக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கம் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி ஆகியவற்றி செய்து வருவதுடன், கலந்து கொள்ளும் மாற்று மத அன்பர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
'தாஃவா' எனும் அழைப்பு பிரசார பணியை எவ்வாறு மேற்கொள்வது? முஸ்லிம் அல்லாதவர்களை எவ்வர்று அணுகுவது? அவர்களோடு எவ்வாறு பழகுவது?எவ்வாறு பேசுவது? போன்ற விளக்கங்களை அளிக்கும் அவசியம் நமக்கு உள்ளது.
இதன் அடிப்படையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு பயிற்சி அளிக்கும் தாஃவா பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதன் மூலம் சுமார் 300 அழைப்பாளர்கள் (தாயீக்கள்) உருவாக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் தாஃவா பணிகளில் தங்களை ஆர்வத்தோடு ஈடுபடுத்தி வருகின்றனர்.
கிறித்துவ தேவாலயங்களில் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறும் வாராந்திர வழிபாடுகளில் "இயேசு அழைக்கிறார்" எனும் பிரசுரங்கள் நமது அறக்கட்டளை சார்பாக விநியோகிக்கப்பட்டு கிறித்துவ மக்களுக்கு தாஃவா செய்யப்பட்டது. இப்பிரசுரம் கிறித்துவ மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
நாடறிந்த நல்லறிஞர் பேராசிரியர் Dr. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன் நமது மக்காஹ் மஸ்ஜிதில் வரவேற்ப்பு விழாவும் இஸ்லாமிய தாஃவா (அழைப்பு) விழாவும் நடத்தப்பது. மிக பாரம்மாண்டமாக பல்லாயிரக்கனக்கான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றது குறிப்பிட தக்கது. அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோ. தொல். திருமாவளவனுக்கு பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச மருத்துவமனை & மருத்துவ உதவிகள்.
ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் இலவச நிரந்தர மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் எனும் நன்னோக்கில் சென்னை, சிந்ததிரிப்பேட்டையிலும்,பிராட்வேயிலும் இரண்டு இலவச மருத்துவமனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று மருத்துவர்கள் மற்றும் இரண்டு உதவியாளர்களைக்கொண்டு நடத்தப்பட்டு வரும் இம்மருத்துவமனைகளில் மாதந்தோறும் 2000 முதல் 2500 வரை ஏழை நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் அனைவருக்கும் 3 நாட்கள் முதல் 10 நாட்களுக்கு தேவையான மருந்து-மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக மாதந்தோறும் சுமார் ரூ. 50000/- செலவிடப்படுகிறது.
மேலும் இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பு, கேன்சர் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ. 25000 வரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையின் பெயரில் காசொலயாக் அவழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 250 பேர் பயனடைந்துள்ளனர்.
இலவச மருத்துவமுகாம்
அழகிய கடன் அறக்கட்டளை குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம், சக்கரை நோய் விழிப்புணர்வு முகாம், இரத்ததான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம் போன்ற சமூக சேவைகளின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களை கொண்டாடி வருகின்றது.
கல்வி நிதி உதவி
இஸ்லாமிய மக்கள் கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! இதற்க்கு வறுமையும் ஒரு காரணமாகும். இதை கருத்தில் கொண்டு ஏழை மக்களுக்கு கல்வி நிதி உதவி செய்ய நமது அறக்கட்டளை முன் வந்தது. பெரும்பாலும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் தான் நம் சமுதாய மாணவ மாணவியர்கள் படிப்பை இடை நிறுத்தம் செய்கின்றனர்.
ஆகவே, 10 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்க்கு 3000 ரூபாயும், 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 5000 ரூபாயும் அவ்கர்களது மேற்படிப்புக்கான நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இத்தொகை பள்ளி, கல்லூரிகளின் பெயரில் காசோலையாக மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களின் ஒவ்வொருவர் வீடுகளுக்கும் நமது அறக்கட்டளையின் நிர்வாகிகள் நேரடிய சென்று, அவர்களது பொருளாதார, மார்கப்பற்று, கல்வி பின்னணி, ஆகியவற்றை கள ஆய்வு செய்தி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
2006-07 ஆம ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பணியில் சுமார் ரூ 2.5 இலட்சமும், 2007-08 ஆம் ஆண்டு சுமார் ரூ 6 இலட்சமும், 2008-09 ஆம் ஆண்டில் 8 இலட்சமும், 2009-10 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 10 இலட்சமும் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தை பற்றி முழு விவரங்கள் அடங்கிய தனி ஆங்கில கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!
அழகிய கடன் அறக்கட்டளையின் இத்தகைய அரும்பநிகளில் நீங்களும் பங்கெடுக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம். அல்லாஹ் நமது அனைத்துப் பணிகளையும் கபூல் செய்து ஈருலக ஜெயசீலர்கலாக ஆக்கியருள்வானாக! உங்கள் பகுதியில் இது போன்ற அறப்பணிகள் ஆற்றிட ஆலோசனைகளுக்கு எங்களை அணுகுங்கள்!
|
தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை,
மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
822, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
|
Contact
Azhagia Kadan Arakkattalai,
Makkah Masjid Campus,
822, Anna Salai,
Chennai – 600 002.
|
|
Phone. 044 - 4214 1333
Cell : Br. Haji Muhammad (haji bai) - +91 7299831983, Br. Arif - +91 9600006246,
Br. Abdul Rahman +91 9840889678
Email :
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
|
Donate Us
For Sadaqa
Account Name : Azhagia Kadan Arakkattalai
Account Number : 1364 145 000 0079
Bank : HDFC bank, Raheja Tower Branch, Chennai. IFSC Code HDFC0001364
For Zakath
Account Name : Azhagia Kadan Arakkattalai - A/C Zakath
Account Number : 1364 145 000 0069
Bank : HDFC bank, Raheja Tower Branch, Chennai. IFSC Code HDFC0001364
Send your cheques to this address
Chief imam,
Makkah Masjid,
822, Anna Salai, Chennai - 600002.
Attn :
1. Please do not transfer money from overseas bank.
Kinldycontact us by email or phone in case if you have any questions.
2. When you transfer Money through e-transfer, please send an email to
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
with the following detials WITHOUT FAIL.
-
Name
-
Amount
-
donation is sadaqa or zakath,
-
e-transferrefence number,
-
date/time when transfer was made,
-
how to send receipt from azhagiya kadan to you -> by email or post
3. for any questions send an email to
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
|
மௌலானா S. ஷம்சுதீன் காசிமி M.A.,
|
|
நிறுவனர் & தலைவர்
|
|
சகோதரர் அப்துல் ரஹ்மான்
பொருளாளர்
|
|
|
|
Comments